ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது முதலாவது பதவிக் காலத்துக்குரிய ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்கு முன்னரே இரண்டு ஆண்டுகள் முன்பதாகவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், இந்த எஞ்சிய இரண்டு ஆண்டு காலத்துக்குரிய அவரது பதவி நிலை என்னாயிற்று?
ஈழத் தமிழர் விவகாரத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் "அங்கிடுதத்தி"த் தனத்தால் அவருக்குத் தீராப்பழி ஏற்பட்டுவிட்டது. "உலகத் தமிழினத் தின் தலைவர்" என்று தன்னைத் தமிழினம் மதிக்கும் என்றுதான் இதுகாறும் கருதி வந்தார் கலைஞர் கருணாநிதி.
ஈரான், பர்மா மற்றும் சீனா போன்ற சிறிலங்காவின் நட்பு நாடுகளின் வரிசையில் நோர்வேயும் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைக்கு துணை போவதாக நோர்வேஜிய பேராசிரியர் ஒருவர் எழுதியுள்ளார்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை ஒன்றிணைத்து முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நேற்று முதல் மூன்று நாள்களுக்கு சுவிட்ஸர்லாந்தின் சூரிச் நகரில் உயர் மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படுவதாகத் தெரிவிக்கும் செய்திகள் இப்போது வெளியாகியுள்ளன.
ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நேரத்திலும் வெளியிடுவார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயத்தில் "கடமையைச் செய்!"என்ற பகவத் கீதை வாசகத்தைக் கைக்கொள்ள வேண்டியதுதான் நமது பொறுப்பாகும்.
நாடு முழுவதிலும் உள்ள ஆயிரத்துக்கும் அதிகமான அரசியல் கைதிகள் நேற்றுமுன்தினம் ஒருநாள் அடை யாள உண்ணாவிரதம் இருந்திருக்கின்றார்கள்.
நீக்ரோக்களுக்கு அடுத்தபடியாக, ஆங்கிலேயர்களால் கொத்தடிமைகளாக பயன்படுத்தப்பட்ட ஓர் இனம் தமிழினம் தான். மலேசியா(சிங்கப்பூர்,) பர்மா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, பிஜி போன்ற பல காலனியாதிக்க பிரதேசங்களை வளப்படுத்த, 200 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர்கள் அங்கெல்லாம் “ஓட்டிச்” சொல்லப்பட்டனர்.
"ஆடு நனைகின்றது என ஓநாய் அழுததாம்!" இந்தப் பேச்சு மொழி போல இருக்கின்றது நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சுதந்திரக் கட்சி மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி குறித்து தெரிவித்த கருத்து.
விரைவில் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட் பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை நிறுத்தும் முடிவு சாத்தியமாகும் சூழ்நிலை திடுதிப்பென ஏற்பட்டமை பல தரப்புகளிலும் அதிர்ச்சி அலைகளைத் தோற்று வித்திருக்கின்றது.
நாடாளுமன்றத்துக்குச் செல்ல தமிழ் இனப் பேராசிரியர்கள் முன்வர வேண்டும் என யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் வலம்புரி நாளிதழ் கேட்டுள்ளது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 அடுத்தபக்கம் >> |