eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Advert:

சத்தியத்திற்காய் சாகத் துணிந்து விட்டால் ஒரு சாதாரண மனிதப் பிறவியும் சரித்திரம் படைக்க முடியும்.

 
 
 
 
» பிந்திய செய்திகள்
அமைச்சர் சரத் பொன்சேகாவின் இன்றைய கருத்து பகிர்வுகள் ஒரு ஆரம்பம் மட்டும்தான். இதன் தொடர்ச்சியாக பல்வேறு புதுப்புது உண்மைகள், திடுக்கிடும் காட்சிகள் இன்னமும் பல வரவுள்ளன என நான் நினைக்கின்றேன். இது ஒரு சிறு கதை அல்ல, ஒரு தொடர்கதை. இதையே நாங்கள் சொன்னால் இட்டுக்கட்டிய புனைக்கதை.
பிரபாகரன் இறுதிநேரத்தில் உயிருடன் இருந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்ற உண்மைகளில் கூட இப்போது சந்தேகம் எழுந்துள்ளது. பிரபாகரனுக்கு உண்மையில் என்ன நடந்தது என்ற உண்மைகளை கண்டறிய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ரக்னா லங்கா, எவன்கார்ட் ஆயுத களஞ்சிய நிறுவன ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக் ஷ நேற்று எட்டு மணிநேரம் நின்று கொண்டு சாட்சியமளித்துள்ளார்.
சித்திரவதைகளின் அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை காரணங்காட்டி முன்னாள் போராளியொருவர் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனையிறவு இராணுவ முகாம் மீது 2000ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியவர் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பெர்ணாண்டோ எமில்தாஸ் என்பவரே யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனால் நேற்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தை அடுத்த உச்சப்பட்டியில் உள்ள ஈழத்தமிழர் ஏதிலிகள் முகாமில் வருவாய் துறை அதிகாரியின் மனிதநேயமற்ற கொடுஞ்செயலால் விரக்தியடைந்த ரவீந்திரன் என்கிற ஈழத்தமிழ் ஏதிலியின் சாவுச் செய்தியில் கூட நஞ்சூட்டப்பட்டுள்ள கொடுமை தமிழகத்தில் அரங்கேறி வருகிறது.
தமிழன் என்று சொல்வதில் பெருமைப்படுவதாகவும், ஆனாலும் இன்று எவருடைய கண்களுக்கும் தெரியாத மனிதர்களாக வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஜேசுதாசன் கேசரிவர்மன் தெரிவித்தார்.
இலங்கையில் நடந்த போரின்போது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளில் பொதுமக்களுக்கு உரியதை, அவர்களிடமே கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் நாமல் ராஜபக்ஷ மீது காவல்துறையின் நிதி மோசடி புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பிரித்தானிய தன்னார்வ தொண்டரும் மருத்துவருமான தமிழ்வாணி என்ற பெண்ணின் விடுதலையின் பின்னணியில், கடந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கு இடையில் நேற்று பாராளுமன்றத்தில் கடுமையான வாய்தர்க்கம் ஏற்பட்டது.

<< முதல்பக்கம் 1 2 3 ... 21 22 23 ... 312 313 314 அடுத்தபக்கம் >>

Loading
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |