தமிழீழக் கோரிக்கையைக் கைவிட்டு தங்களுடன் வி.உருத்திரகுமாரன் நிச்சயம் சமரசம் செய்துகொள்வார் என்று சிறீலங்கா அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்தவருடம் சனவரி மாதம் முதல் மேமாதம் வரையிலான இடைப்பட்ட காலத்தில் வன்னியில் நாற்பதினாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அரசாங்கத்தை இந்தியா ஒருபோதும் வழி நடத்த முடியாது என நிர்மாணம் பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுச் சேவைகள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான இரண்டாம் கட்ட யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களினால் மேற்கொள்ளப்பட்டு வரும் சர்வதேச ரீதியான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நோர்வேயில் இயங்கி வரும் ஜீ.ரீ.எப். அமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகளின் மாற்று வடிவமேயாகும் எனச் சிங்கப்பூரின் நாங்யாங் பல்கலைக்கழக சர்வதேச விவகார மற்றும் பயங்கரவாத, விரிவுரையாளர் றொகான் குணரட்ண எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் தம்பித்துறை பிரபாகரனுக்கு நாளை சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.
தமிழ் மாணவர் பேரவை என்ற அமைப்பு தமிழகத்தில் இருக்கின்றது. அதன் அமைப்பாளர் பாலகுரு, அவருடன் "தமிழா தமிழா" என்ற பத்திரிக்கையை எப்போதாவது கொண்டுவரும் பாண்டியன் என்பவரும் சேர்ந்து கடந்த வாரம் ரகசியமாக கொழும்பு சென்றுள்ளார்கள்.
ஈ.பி.டி.பி கட்சியின் யாழ் மாநகர சபையின் பிரதி மேயர் இளங்கோ கைது செய்யப்பட்டதை அடுத்து மாநகர சபை ஊழியர்கள் இன்று முதல் 'வேலை நிறுத்தப் போராட்டத்தை' மேற்கொண்டுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறைப் பொறுப்பாளரான சு.ப தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர், வன்னி நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து வந்த சமயத்தில் இலங்கை ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |