பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு விமானம் மூலம் நேற்று முன்நாள் திரும்பி வந்த தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரன் ஆயுதம் ஏந்திக் களம் இறங்குவதற்குக் காரணம் தென்னிலங்கைத் தலைவர்களின் அரசியல் பக்குவம் இன்மையே. இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகளில் இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றியவருமாகிய மங்கள முனசிங்க தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் அளிக்கையில் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வாகனங்களை விற்பனை செய்த நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா, மெனிக்பாம் வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 இடம்பெயர் தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை படையினரால் பலவந்தமாக செட்டிக்குளம், கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர்.
எம்.வீ.சண்.சீ கப்பலில் வந்திறங்கி அகதி கோருவோர்களில் 75 நபர்களின் முதல் தடுப்புக்காவல் விசாரணை நேற்று (17.08.2010) செவ்வாய்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டிருந்தது.
பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரது உரிமைகளைப் பறித்து அவரை சிறையில் அடைத்து வைத்திருப்பதானது மாத்தையாவை பிரபாகரன் கூண்டில் போட்டு கொன்றதையும் விட கொடுமையானது. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தினம் இந்த வருடம் யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்பட உள்ளதாக அறிவிக்கப்படுகிறது. எதிர்வரும் டிசெம்பர் 26ஆம் திகதி யாழ்.பல்கலைக்கழகத்தில் இந்தக் கொண்டாட்டங்களை நடத்தவும் முடிவாகியுள்ளது.
கோயில் பிரசாதத்தை உட்கொண்ட ஒன்றரை வயதுச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதுளை மாவட்டம், பசறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து படைப்பிரிவுகளையும் ஆயுதங்களையும் கொண்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமையானது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும் என பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழர்களைக் கையறு நிலைக்குள் தள்ளி விட்டுள்ள போரின் முடிவு புலிகளோடு இனப்பிரச்சினைத் தீர்வுக்கும் சமாதி கட்டி விட்டதாகவே அரசாங்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. புலிகள் போன்று இனப்பிரச்சினைத் தீர்வை வலியுறுத்தக் கூடிய தமிழர் தரப்பு என்று எதுவும் இல்லாததால் அதைப் பற்றிய கவலையேதுமின்றிக் காலத்தைக் கழிக்கிறது அரசாங்கம்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |