இம் முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள மிகவும் பொருத்தமான மற்றும் வினைத்திறன் மிக்கவர்களை அமைச்சரவைக்குத் தெரிவு செய்யவுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அமைக்கப்படவுள்ள புதிய பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை முஸ்லிம் காங்கிரசும் சேர்ந்து பணியாற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதென இரு கட்சிகளும் இணக்கம்?
பிரிட்டனின் நடக்கவுள்ள தேர்தலில் விடுதலைப் புலிகள் சார்புக் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சி தனது வேட்பாளர்களை நிறுத்துவதற்குத் தயாராகிறது என அறியப்படுகிறது.
இலங்கையிலுள்ள மனித உரிமைச் செயற்பாடுகளை நாம் உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். அங்கு தற்போதும் ஆபத்துக்கள் உள்ளன. அங்கு மக்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே காணப்படுகின்றது: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
எதிர்க்கட்சித் தலைவராக சரத் பொன்சேகாவை நியமிக்கும்படி ஐக்கிய தேசிய முன்னணியில் தெரிவாகியுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா செல்லும் இலங்கை இராணுவத் தளபதி ஜெகத் ஜெயசூரியவிடம் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தத் தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கொழும்பு வந்து சேர்ந்துள்ளார். தாம் இரவு பத்தரை மணியளவில் கொழும்பு விமானநிலையத்தை வந்தடைந்தார்.
அரசியல் தீர்வு விடயத்தைப் பொறுத்தவரை, தீர்வு எட்டப்படும் வரை காத்திருக்காமல் இடைக்கால அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டு பணிகளைச் செய்ய நாம் ஆயத்தமாக இருக்கிறோம்: மாவை
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வை ஏற்படுத்திக் கொடுப்பார் என்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாழப் பழகிக் கொள்ள வேண்டுமென ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெவித்துள்ளார்.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை எத்தகைய போக்கினை அடையப் போகின்றது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அடுத்த நகர்வுதான் தீர்மானிக்கப் போகிறது. AFP
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |