சனாதிபதி தேர்தல் தமிழ்மக்களைப் பொறுத்தமட்டில் ஒரு அரிய சந்தர்ப்பம். எங்களுடைய எதிர்கால நிலைப்பாட்டை தீர்வை முழுமையாக மாற்றி அமைக்க கூடிய சந்தர்ப்பம். இதனை நாம் இழக்ககூடாது. இரா.சம்பந்தன்
பாதாள உலகத் தலைவர்கள் பர்துகாப்புத் தரப்பினரால் கொலை செய்யப்படும் நடவடிக்கைள் ஆரம்பிக்கப்பட்ட போது நாட்டிலிருந்து தப்பிச் சென்ற லால் பீரிஸை, ஜனாதிபதி இலங்கைக்குத் திரும்புமாறு அழைப்பு.
இந்தியாவின் நிலைப்பாட்டில் தற்போது மாற்றத்தைக் காண்கிறோம். இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவேண்டும் என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்து வருவதை அவதானிக்கிறோம்.
சிறீலங்கா அரசு தடுத்து வைத்துள்ள விடுதலைப்புலிகள் என சந்தேகிக்கப்படும் பல ஆயிரம் பேரை தாம் விடுதலை செய்யப்போவதில்லை என சிறீலங்கா அரசின் எரிபொருள் சக்தி துறை அமைச்சர் டபிள்யூ டி ஜே செனிவரட்னா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உயர் பாதுகாப்பு வலய பிரகடனங்களை விலக்குதல், கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல் உட்பட எந்தவித முடிபுகளையும் அறிவிக்கவில்லை.
வவுனியாவிற்கு இன்று மாலை ஞாயிறு விஜயம் செய்த இலங்கையில் உள்ள வத்திக்கான் பிரதிநிதி மேற்ராணியார் யோசப்பு ஸ்பிரெறி ஆண்டகைக்கு இறம்பைக்குளம் பங்கு மக்களினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் இறுதிக்கிரியைகளின் பின்னர் அஞ்சலி உரையாற்றிய இடதுசாரி முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் பூதவுடல் அவரது சொந்த இடமான வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லும் வழியில் நேற்று வவுனியாவில் தனியார் விடுதியொன்றில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான மக்கள் அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மரணமடைந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தந்தையாரான திருவேங்கடம் வேலுப்பிள்ளையின் தகனக் கிரியைகள் நாளை வல்வெட்டித்துறையில் நடைபெறவிருக்கின்றன.
தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் அமரர் திருவெங்கடம் வேலுப்பிள்ளையின் சடலம் இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் கொழும்பிலிருந்து வல்வெட்டித்துறைக்கு எடுத்து செல்லப்பட்டது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 அடுத்தபக்கம் >> |