eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
5ஆம் ஈழப் போருக்கான ஆயத்தங்களில் புலிகள்?: 'கல்ஃப் நியூஸ்' பத்திரிகை
05 ஆம் கட்ட ஈழப் போருக்கான ஆயத்தங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்று டுபாயில் இருந்து வெளியாகும் கல்ஃப் நியூஸ் ஆங்கில தினசரிப் பத்திரிகை அதற்கு கிடைத்திருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அதிரடித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அப்பத்திரிகைச் செய்தியில் இது தொடர்பாகத் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:

"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இலங்கை அரசு தோற்கடித்து 14 மாதங்கள் ஆகின்றன. ஆனால் புலிகளுடனான யுத்தம் இன்னமும் முடிவுக்கு வந்து விடவில்லை. அவர்கள் தனி நாடு கோரி வெளிநாடுகளில் இருந்து கோரி போராடுவார்கள் என்று புலிகள் எமது பத்திரிகைக்கு தெரிவித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ளார். எமது தமிழீழப் போராட்டம் கனடா,பிரித்தானியா, ஆஸ்திரேலியா ஆகிய வெளிநாடுகளில் இருந்து முன்னெடுக்கப்படும் என்று அடித்துக் கூறினார்.

தமிழ் குழுக்கள் 05 ஆம் கட்ட ஈழப் போருக்காக கனாடாவின் தலைநகரான ரொரொன்ரோவில் மும்முரமாக நிதி சேகரித்து வருகின்றார்கள். கனேடிய அரசு இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்கு தடை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ரொரொன்ரோவில் உள்ள வியாபார ஸ்தாபனம் ஒன்றிலிருந்து வி.சோமி என்பவர் இந்நிதி சேகரிப்பு நடவடிக்கைகள் தமிழர்கள் செறிந்து வாழும் ஸ்கார்பரோ,பிரம்பரன் ஆகிய பகுதிகளில் தீவிரமாக இந்நிதி சேகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையை எமக்கு உறுதிப்படுத்தினார்.

நான்கு நாள் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டு எமது நிருபர் அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். அவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவரின் சொந்த ஊரான வல்வெட்டித்துறைக்கு நேரில் சென்று அப்பகுதி மக்களைப் பேட்டி கண்டுள்ளார். சிவில் யுத்தத்தில் இதுவரை சுமார் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டுள்ள போதிலும் எமது போராட்டம் மிகுந்த அர்ப்பணிப்புடன் இனியும் முன்னெடுக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் எமக்கு தெரிவித்தார்.

அவர்களில் ஒருவர் எமக்குத் தெரிவித்தவை வருமாறு:

"எமது போராட்டம் தொடர்கிறது.ஆனால் எமது போராட்டத்தை வெளிநாடு ஒன்றிலிருந்துதான் முன்னெடுப்போம்.சில நாட்கள் வேட்டைக்காரர்கள் புலியை வேட்டையாட முடியும். சில நாட்கள் புலியும் வேட்டைக்காரர்களை வேட்டையாட முடியும்.""
Print this article Posted on 29 Jun 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |