கைதடியில் பொலிஸார் மீது தாக்குதல்! மோட்டார் சைக்கிளில் வந்தோர் கைவரிசை
யாழ்ப்பாணத்தில்,கைதடிச் சந்தியில் இன்று போக்குவரத்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து பொலிஸாரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தாக்கி விட்டுச் சென்றுள்ளனர்.
இருவரும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வேகமாக வந்திருக்கின்றனர்.பொலிஸார் மறித்தும் நிற்கவில்லை.
ஆகவே பொலிஸார் துரத்திச் சென்றனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்திருந்தவர்களோ பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் சென்று விட்டனர். இதையடுத்து சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். கைதடி முழுவதும் பொலிஸாரின் தேடுதல் வேட்டை இடம்பெற்றது.
Source: tamilcnn