eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
அகதிகள் யுத்தக் குற்றச் சாட்சிகளாக மாறலாம்! அஞ்சுகின்றது இலங்கை..
ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரிச் செல்கின்ற தமிழ் அகதிகள் யாராவது இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச் சாட்சிகளாக மாறக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுகின்றது என ஐ.நாவின் கொழும்பு அலுவலகப் பேச்சாளராக முன்பு கடமையாற்றிய கோர்டோன் வெய்ஸ் தெரிவித்துள்ளார்.

அவர் ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திச் சேவைக்கு வழங்கிய பேட்டி ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்தவை வருமாறு:-

"அரசியல் தஞ்சம் கோரி வரும் தமிழர்களுக்கு ஆஸ்திரேலியா அரசியல் தஞ்சம் வழங்கினால் அவகள் இலங்கையின் யுத்தக் குற்றங்களுக்கு எதிராக சாட்சியம் வழங்கக் கூடும் என்று இலங்கை அரசு அஞ்சுகின்றது.

ஆகவேதான் இந்த அகதிகளுக்கு பயங்கரவாத முத்திரை குத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அல்குவைதா போன்ற இயக்கங்களுடன் தொடர்பு உண்டெல்லாம் இலங்கை அரசும் அவர்களின் எடுபிடிகளும் பொய்ப் பிரசாரம் செய்து வருகின்றனர்."
Print this article Posted on 18 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |