eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
ஜனாதிபதியின் உயிருக்கு 10 மில்லியன் ரூபாய் விலை?
Mahinda ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை படுகொலை செய்கின்ற முயற்சிக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் எம்.பி ஒருவர் உதவி, ஒத்தாசையாக இருந்திருக்கின்றாரா? என்பது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள்.

ஜனாதிபதியை படுகொலை செய்ய சதித் திட்டம் போட்டிருந்தனர் என்கிற சந்தேகத்தில் தமிழ் இளைஞர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஜனாதிபதியைக் கொல்கின்றமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திடம் இருந்து ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் ரூபாயை கூலியாக பெற்றிருந்தனர் என்று நம்பப்படுகின்றது.

சிவராஜா சுபகிருஷ்ணன், தவராஜசிங்கம் சுபாஷ், எம்.லின்ரன் ஆகியோரே கைது செய்யப்பட்டிருப்பவர்கள் ஆவர். இவர்கள் மூவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டனர். கொழும்பு பிரதான நீதிவான் ரஸ்மா வெங்கப்புலி முன்னிலையில் இவர்கள் மீதான வழக்கு அழைக்கப்பட்டது.

அப்போது இவர்களை பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்று குற்றப்புலனாய்வுப் பொலிஸார் கோரினர். நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கி உள்ளது.

இதே நேரம் சந்தேகநபர்களில் ஒருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் நாடாளுமன்ற உறுப்பினராக அண்மைக் காலத்தில் பதவி வகித்த ஒருவரின் தனிப்பட்ட செயலாளராகப் பணியாற்றி இருக்கின்றார் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலம் ஊர்ஜிதமாகி உள்ளது.

இந்நிலையில் கூட்டமைப்பின் அந்த முன்னாள் எம்.பிக்கு இப்படுகொலை முயற்சியில் சம்பந்தம் இருக்கின்றதா? என்கிற கோணத்திலும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Source: Tamilcnn
Print this article Posted on 21 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |