eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
வேலணை உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது
யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது மகள் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஊர்காவற்றுறை நீதவான் ஆர்.வசந்தசேனன் யாழ்போதனா வைத்திய சாலை சட்டவைத்ததிய அதிகாரி இரத்தினசிங்கம் ஆகியோர் உடனிருந்தனர்.

தோண்டப்பட்ட சடலம் ஊர்காவற்றுறை நீதிமன்றிற்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் கொழும்பிற்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது.

இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தர்ஷிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் சந்தேகநபரான சிங்கள வைத்தியர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Print this article Posted on 29 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |