eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை பான் கீ மூன் நிராகரிப்பு
இலங்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புக்கள் விடுத்த கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிராகரித்துள்ளார்.
ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைப்பிரிவில் இலங்கைப் படையினருக்கு சந்தர்ப்பம் அளிக்கப்படக் கூடாதென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கோரிக்கையை பான் கீ மூன் நிராகரித்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை அமைப்புக்களுக்கும் ஐக்கிய நாடுகளின் ஊடகப் பேச்சாளர் மார்டீன் நெசர்கீக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.

ஹெய்ட்டி, சாட் போன்ற நாடுகளில் கடமையாற்றி வரும் இலங்கை அமைதி காக்கும் படையினரை விலக்கிக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமைதி காக்கும் படையின் பணிகளுக்கும் ஆலோசனைக் குழுவிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Print this article Posted on 30 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |