போர் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்க ஜாதிக ஹெல உறுமய முயற்சி
இலங்கையில் எவ்விதமான போர்க் குற்றச் செயல்களும் இடம்பெறவில்லை என்பதனை நிரூபிக்கும் வகையில் ஜாதிக ஹெல உறுமய கட்சிய ஆவணமொன்றை தயாரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது.
போர்க் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என்பதனை வலியுறுத்தும் வகையில் எழுத்து மற்றும் வீடியோ காட்சிகள் அடங்கிய ஆவணங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மாகாணசபை அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணம் பதினைந்து நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் ஆவணம் தயாரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நடவடிக்கைகளை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சும் இந்த ஆவணத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.