eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / ஈழம் செய்திகள்
கடலில் மூழ்கும் நிலையில் இருந்து இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் காப்பாற்றப்பட்டுள்ளனர்
கடலில் மூழ்கும் அபாய நிலையில் இருந்த இலங்கை அகதிகள் உள்ளிட்ட 81 பேர், அவுஸ்திரேலியாவின் வடமேற்கு கிரிஸ்மஸ் தீவுக்கடற்பரப்பில் வைத்து, நேற்று முன்நாள் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கடத்திய நான்கு இந்தோனேசிய ஆட்கடத்தல் காரர்களும் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலியாவில் தொழிலாளர் கட்சி தெரிவானதைத் தொடர்ந்து, அங்கு சென்ற 150வது படகாக நேற்று முன்நாள் சென்ற படகு பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நேற்று முன்நாள் கைது செய்யப்பட்ட நான்கு ஆட்கடத்தல் காரர்களும், குற்றவாளிகளாக கருதப்படமாட்டர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் நான்கு பேரும், ஏனைய அகதிகளுடன் ஆபத்தான நிலையில் இருந்து காப்பாற்றப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் 'காப்பாற்றப்பட்ட கடற்பயணிகள்" என கருதப்படுவரே தவிர, சட்டவிரோத குடியேறிகள் என கருதப்பட மாட்டார்கள் என அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கப்பல் மூழ்கும் நிலையில் இருந்ததாக கடற்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

எனினும் அது மூழ்கிய நிலையில் இருக்கவில்லை என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது ஆட்கடத்தல் காரர்களின் சூழ்சியாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

(இந்தவேளையில், அண்மையில் பிரதமர் ஜூலியா கில்லாட்டின் நடவடிக்கை தொடர்பில் தகவல் வெளியிட்டிருந்த கருத்து முக்கியமானதாக நோக்கப்படுகிறது. அவுஸ்திரேலியா சட்டவிரோத குடியேறிகளை தடுக்க நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளும் அதேநேரம் அதற்கு ஏற்ப கடத்தல்காரர்களும் தமது சூழ்ச்சிகளை மாற்றிக்கொள்வர் என்பதுவே அந்த கருத்தாகும்)

இதேவேளை அங்கு அவுஸ்திரேலியாவில் மீட்கப்பட்ட அகதிகளுக்கு, அது தொடர்பிலான தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கும் பட்சத்தில், அவர்கள் சிறை வைக்கப்படுவர் என இராணுவத்தினர் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் நேற்று முன்நாள் மீட்கப்பட்ட அகதிகளில் அதிக அளவிலானவர்கள் இலங்கையர்கள் எனவும், பெரும்பாலும் அவர்கள் 18 தொடக்கம் 50 வயதுடைய ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்ட், தமக்கு அகதிகளின் படகுகளை நிறுத்தும் எண்ணம் இல்லை எனவும், அவர்கள் தமது நாடுகளில் இருந்து வெளியேறாமல் தடுப்பதே தமது எண்ணம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே பிராந்திய ஒத்துழைப்பினை தாம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Print this article Posted on 30 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |