ஈழ விடுதலைப்போரில் வீழ்த்தப்பட்ட வேங்கை பிரபாகரனுக்காக என் விழிகள் நீரைப் பொழிகின்றன. கண்ணீர் சிந்துவதற்கு எனக்கு உரிமை இல்லையா? என்று கேட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
விடுதலைப் புலிகள்தான் ஈழத் தமிழரின் இன்னலுக்குக் காரணம் என்று இப்போது குற்றம் சுமத்தும் கலைஞரின் பேனா, தன் சொந்த நலனுக்காக, ராஜபக்ஷே கும்பலின் இன அழிப்புப் போருக்கு உதவிய இந்திய அரசை மட்டும் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறது. இவ்வாறு தமிழருவி மணியன் தெரிவித்ததாக ஜூனியர் விகடன் தனது வார இதழில் குறிப்பிட்டுள்ளது.
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள் மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை.
தமிழினத்தின்மேல் கரிசனைகாட்டுவதுபோல் 'ஒருகுடம் பால்' போன்ற கட்டுரையில், ஒருதுளியாய் விதைத்திருக்கும் நஞ்சு இது. விகடன்: 'தனி ஈழம் கேட்காத, சகோதர யுத்தம் செய்யாத இந்திய மீனவர்களை நித்தமும் அடித்து விரட்டும் சிங்களக் கடற்படையைக் கண்டிக்காத பிரணாப் முகர்ஜி, இலங்கை குழப்பங்களைத் தீர்க்கப் போயிருப்பது அங்குள்ள கட்சிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது' என்று விகடன் தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பாக கடந்த 17ஆம் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையை விமர்சித்து, பிரபாகரன் மீது பழியை சுமத்தி தான் செய்த தவறை மூடி மறைக்கப் பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
விடுதலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.
'நாடுகடந்த தமிழீழ அரசு என்ற கட்டமைப்பு புலம்பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்களின் தாயகத்துக்கான பணி என்ற விடயத்தை திருப்திப்படுத்துமே தவிர களத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது' என்று இந்தியாவின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைபுலிகளுக்கு இங்கே தடை இருக்கிறது. தடையை வாங்கி தந்தவரோடு சேர்ந்து கொண்டு, அவர் காலடியில் அமர்ந்து கொண்டு தனி ஈழம் வாங்கி தருவோம்.
மறுவாழ்வு அளிக்கிறோம் என்ற போர்வையில் இலங்கையில் தமிழர்கள் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இவ்வாறுஜெனீவாவில் நடந்த சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த ஐநா மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பேரழிவும் அவநம்பிக்கைகளுமாய் சிதைந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களின் இன்றைய துயர்களை பரந்துபட்ட பொதுமக்கள் வெளிக்கு அன்பு நேயத்தோடு எடுத்துச் சொல்லும் முயற்சியாய் ”ஈழம்: மௌனத்தின் வலி” என்ற புத்தகம், சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >> |