பேரழிவும் அவநம்பிக்கைகளுமாய் சிதைந்து கிடக்கும் ஈழத்தமிழ் மக்களின் இன்றைய துயர்களை பரந்துபட்ட பொதுமக்கள் வெளிக்கு அன்பு நேயத்தோடு எடுத்துச் சொல்லும் முயற்சியாய் ”ஈழம்: மௌனத்தின் வலி” என்ற புத்தகம், சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
இலங்கையில் தமிழர்களை மீட்க மறுத்த இந்தியா, ராஜபக்சேவை மட்டும் காப்பாற்ற துடிப்பது ஏன்? என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மாவீரர் நாளுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில், இந்த ஆண்டு பொட்டு அம்மான்தான் இந்த வரலாற்றுப் புகழ்மிக்க உரையை வாசிக்கப் போகிறார் என்று ஆனந்த விகடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெனீவாவில் நவம்பர் 11 முதல் 13 வரை நடக்கும் ஐநா சிறுபான்மையினர் மாநாட்டில் தொல் திருமாவளவன் கலந்து கொள்கிறார்.
தமிழர்கள் தமிழீழத்திலும் தமிழகத்திலும் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில், இங்கு சிங்களவர்கள் நிம்மதியாக பட்டப்படிப்புக்களை தொடர்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும்.
இலங்கையில் தனி தமிழ் ஈழம் அமையும் வரை அங்கு போர் ஓயப் போவதில்லை என்று மதிமுக பொது செயலாளர் வைகோ பேசினார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் நடந்த மதிமுக பொதுக்கூட்டத்தில் வைகோ பங்கேற்றுப் பேசினார்.
பிரபாகரன் உருவாக்கிய இன உணர்வு தமிழகத்தில் இனி புரட்சியாக வெடிக்கும் என்று திரைப்பட இயக்குநர் சீமான் கூறியுள்ளார். நாமக்கல் குமாரபாளையம் நகராட்சியில் நாம் தமிழர் இயக்க கலந்துரையாடல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நீங்கள் பெரிதும் மதிக்கக் கூடிய பத்து தமிழர்களை பட்டியலிட்டால் அதில் ஒரு இடத்தை நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாருக்கு கொடுப்பீர்களா?
ஈழத் தமிழர் பிரச்சினையை அணையாத தீபமாக கொண்டு செலுத்தும் தமிழகத் தலைவர் நெடுமாறன். அரசியல் ரீதியாக வெவ்வேறு முடிவுகள் எடுக்கும் தலைவர்களையும் ஒன்றாக இனச்சரடு வைத்து இணைத்துச் செல்வது இவர்தான்.
முத்துராமலிங்கத் தேவர் உயிருடன் இருந்திருந்தால் இலங்கைத் தமிழர்களைக் காக்க படை ஒன்றை அனுப்பியிருந்திருப்பார் என்று கூறினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >> |