பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தன்னுடைய மகள் வீட்டில் தங்கி சிகிச்சை பெறலாம், உறவினர், நண்பர்களைச் சந்திக்கலாம். ஆனால் புலிகள் ஆதரவு அரசியல் பிரமுகர்களை மட்டும் சந்திக்கக் கூடாது.
தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தாவை நாட்டை விட்டு தப்பிக்க விடக்கூடாது, உடனே கைது செய்ய வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ள 'ராம ராவணன்' என்ற மலையாளப் படத்துக்கு கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார் சீமான்.
ராஜபக்சேவுடன் இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் புகழேந்தி வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழர்களின் உணர்வுகளை மத்திய அரசு சற்றும் மதிக்கவில்லை. அதன் வெளிப்பாடே ராஜபக்சேவுக்கு மத்திய அரசு ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பு தருவது என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
கொழும்பு திரைப்பட விழா தோல்வி அடைந்ததற்கு நாம் தமிழராய் இணைந்து வெற்றி பெற்றதே காரணம். இதற்குப் போராடிய அமைப்புக்களுக்கு நன்றி என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக அரசியலில் மூன்றாவது மையப்புள்ளியாக உருவாகியிருக்கிறார் நெடுமாறன். இலங்கைத் தமிழர் பாத காப்பு இயக்கம் மூலம் போர் நிறுத்தம் கேட்டு அவர் முன்னெடுத்த போராட்டங்கள் மத்திய மாநில அரசுகளின் அச்சாணிகளையே அசைத்துப் பார்த்தன.
இனவெறியன் ராஜபக்சே புதுதில்லி வருகையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அறிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் தமிழ்மொழியை காத்த தலைவர் என்ற பெயரை சுமந்து நின்ற கருணாநிதி, இன்று இலங்கைத் தமிழர்களை கொன்று தீர்த்த பழியை சுமந்து நிற்கிறார் என்று கூறினார் லட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் விஜய. டி. ராஜேந்தர்.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >> |