மதுரையில் வருகிற மே 18ம் தேதி புதிய அரசியல் கட்சி தொடங்கப்படுவதாக நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் அறிவித்துள்ளார்.
வழக்கமாக மேடையில் சீமான் சீறினால் இடி முழக்கம். இந்திய மத்திய மாநில அரசுகளுக்கோ சீமான் அச்சமூட்டும் பெயர். வாயைத் திறந்தால் வந்து விழுகிற குண்டுகள் எங்கே வெடிக்கும் என்று தெரியாமல் வழக்கு வழக்குகளைப் போட்டு சீமானை முடக்கப் பார்க்கிறது அரசு.
இலங்கை தமிழர்களுக்கு அடிப்படை உரிமையை பெற்று தரவேண்டியது மத்திய மாநில அரசுகளின் கடமை என்று இலட்சிய திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் திரு விஜய.டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.
ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவாக இந்திய மத்திய அரசும், தமிழக அரசும் செயற்படப்போவதில்லை, எனவே அரசியல் பிரச்சனைகளை மேற்குலகம் தலையிட்டு தீர்த்துவைக்க வேண்டும் என Dr.ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல்துறை நடத்திய தாக்குதலிற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், அகதிகளை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் மீது காவல் துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் கண்டனத்திற்குரியது என்று பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.
சென்னை முத்துக்குமார் ஏற்றி வைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை. தமிழ் ஈழம் அமைய தாய் தமிழகம் ஆதரவாக நிற்க வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
பிரபாகரனுடன் பொட்டுஅம்மானும் உயிரோடு தான் இருக்கிறார் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
சாலச் சிறந்த ஆதாரமாக பிரபாகரனே விரைவில் கண்முன் தோன்றுவார் வெகு விரைவில், என புலிகளின் செய்தித் தொடர்பாளர் ச.தமிழ்மாறன் அறிவித்துள்ளார்.
ஈழத்தமிழர்களின் துயரத்தை இந்திய, தமிழக அரசுகளுக்கு உணர்த்துவதற்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்த முத்துக்குமார் அவர்களின் முதலாண்டு நினைவு நாள் ஜனவரி 29ஆம் தேதி வரவிருக்கிறது.
<< முதல்பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 அடுத்தபக்கம் >> |