இந்திய இலங்கை ஒப்பந்தம் இரத்துச் செய்யப்பட வேண்டும்! வைகோ ஆவேசம்
தமிழக மீனவர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்தியா இலங்கை ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். என்று ஆவேசமாகக் கூறினார் வைகோ.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகில் உள்ள வெள்ளப்பள்ளம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த 7 ந் தேதி நடுக்கடலில் வைத்து நிர்வாணப்படுத்தி தாக்கினர்.
இதில் வெள்ளப்பள்ளத்தை சேர்ந்த செல்லப்பன் என்ற மீனவர் இறந்தார். இந்நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெள்ளப்பள்ளம் கிராமத்துக்கு சென்று அங்கு உயிரிழந்த செல்லப்பன் வீட்டுக்கு சென்ற அவர் செல்லப்பனின் மனைவி ருக்மணி மற்றும் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறி ரூ.25 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை மனிதாபிமானமற்ற முறையில் துப்பாக்கியால் சுடுவதும், அவர்களை தாக்கி சித்ரவதை செய்வதையும் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுவரை 1000 த்துக்கும் மேற்பட்ட அத்துமீறல்கள் சிங்கள கடற்படையினரால் நடத்தப்பட்டு மீனவர்கள் உயிரிழப்பு போன்ற பல துயர சம்பவங்கள் நடந்துள்ளன. இறந்த செல்லப்பன் மகள் மலர்கொடிக்கு அவரது தகுதிக்கேற்ப தமிழக அரசு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும்.
இலங்கை இந்திய ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும். சமீபத்தில் நாகை கீச்சான்குப்பத்தை சேர்ந்த 18 மீனவர்கள் நடுக்கடலில் வைத்து தாக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளாகியுள்ளனர். அதே போல் அக்கரைப்பேட்டை, நாகூர் பகுதி மீனவர்கள் 118 பேர் தாக்கப்பட்டுள்ளனர்.
1997 ம் ஆண்டு வேதாரண்யம் ஆறு காட்டுத்துறை மீனவர்கள் 6 பேர் மீன்பிடிக்க சென்ற போது ஹெலிகாப்டர் மூலம் வந்து இலங்கை ராணுவத்தினர் சுட்டதில் மீனவர்களின் உடலோ, படகோ கிடைக்கவில்லை.
இதுதவிர தற்போது இலங்கை ராணுவத்தில் சீனர்கள் புகுந்து அட்டகாசம் செய்கிறார்கள். சீனர்கள் வருகையால் இந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு பெரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இலங்கை அரசை கண்டித்து வருகிற 16 ந் தேதி எனது (வைகோ) தலைமையில் வேதாரண்யத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த உள்ளோம்.
TIPS US! Send SMS or MMS
with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes
Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit:
|