eelamtimes.com

|நமது சேவை| |வாசகர்பதிவு| |Add to Favourite| |Make home page | |தொடர்புகட்கு|

 
 

Latest videoes

   
Online TV

Online advet

முற்றம் / தமிழகக் குரல்
சீமானே தமிழகத்தின் குரல், நாம் தமிழர் இயக்கம் சவப்பெட்டி அல்ல!
NaamTamilar சீமான் தனி மனிதரல்லர் அவர் ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரல். சீமானை மக்களிடம் இருந்து இனி எப்போதும் தனிமைப்படுத்த முடியாது. இப்படி அறிக்கை வெளியிட்டுள்ளது நாம் தமிழர் இயக்கம்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சீமான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையை கண்டித்து வெளியிட்ட அறிக்கையிலேயே அந்த இயக்கம் இப்படிக் குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கை வருமாறு:-

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில், சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

இதனால் அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் கைது செய்யப்பட்டமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்த பொலிஸார் அனுமதிப்பதில்லை. தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான நாம் தமிழர் கட்சித்தொண்டர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அதே போல் சீமானின் கைதைக் கண்டித்து அச்சடிக்கப்பட்ட சுவரொட்டிகள் அனைத்து ஊர்களிலும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை ஒட்டச் சென்ற கட்சித் தொண்டர்கள் பலரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இது குறித்தெல்லாம் கட்சி நிர்வாகிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அணுகிக்கேட்டபோது சீமான் கைது செய்யப்பட்டமையின் பின்னணியில் தமிழகத்தில் எந்தச் சம்பவமும் நடந்ததாக தெரியக்கூடாது தமிழகம் அசைவற்று இருக்க வேண்டும் என்பது தலைமையிலிருந்து வந்தக் கட்டளை என்று கூறினார்கள்.

அசைவற்று கிடப்பதற்கு நாம் தமிழர் கட்சி ஒன்றும் சவப்பெட்டியல்ல. உயிரோடும் உணர்ச்சிப் பெருக்கோடும் இளைஞர்கள் தூக்கிச் சுமக்கும் தமிழின எழுச்சி இயக்கம். சீமான் தனி மனிதரல்ல; ஒட்டு மொத்த தமிழக மக்களின் குரல்.

சீமானை மக்களிடம் இருந்து இனி எப்போதும் தனிமைப்படுத்த முடியாது. குடிமக்களின் கருத்துரிமைக்கு ஏவி விடப்பட்டுள்ள கறுப்புச்சட்டங்கள் அத்தனையையும் நாம் தமிழர் கட்சி, மக்களை திரட்டி எதிர்க்கும்.
Print this article Posted on 21 Jul 2010 by EelamTimes
 

Designed by: arenawebdesign.com

TIPS US! Send SMS or MMS with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit: |