ராஜபக்சேவின் தம்பியும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சித் துறை அமைச்சருமான பசில் ராஜபக்சேவின் கன்னத்தில் பளார் என அறைந்து அனைவரையும் அதிர வைத்தது ஒரு மனிதக் குரங்கு.
இலங்கையின் டெஹிவளா மிருகக் காட்சி சாலைக்கு வந்திருந்தார் பசில். சுற்றிப் பார்த்து வந்த அவர் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்கு இருந்த பகுதிக்கு வந்தார். அதிகாரிகள் குரங்கை பசிலுக்கு அறிமுகப்படுத்தினர். அப்போது பசில், குரங்குக்குக் கை கொடுத்தார். ஆனால் அடுத்த விநாடியே, அந்தக் குரங்கு, பசில் கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டது.
இதை எதிர்பார்க்காத பசில் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மிருகக் காட்சி சாலை அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குரங்கை அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர்.
குரங்கு அடித்ததால், அதிர்ச்சி அடைந்த பசில் பின்னர் சுதாரித்து வலியக்க வரவழைத்துக் கொண்ட சிரிப்புடன் அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
வழக்கமாக அந்தக் குரங்கு அமைதியாகத்தான் இருக்குமாம். தன்னிடம் கை கொடுப்போருக்கு அதுவும் கை கொடுக்குமாம். தடவிக் கொடுக்குமாம். ஆனால் பசிலைப் பார்த்ததும் ஏன் அது கோபமானது என்று தெரியவில்லை என்று கூறினர் மிருகக் காட்சி சாலை ஊழியர்கள்.
Source: Naamtamilar
Posted on 28 Apr 2010 by EelamTimes
TIPS US! Send SMS or MMS
with snaps
All EelamTimes graphics, logos and site design are Copyrighted by EelamTimes
Team.
|Designed by: arenawebdesign.com| |(c) 2009 eelamtimes.com|
|Online users: | |Visit:
|